ஜெயலலிதா

எனக்கு #ஜெயலலிதா என்ற சொல்லே பிடிக்கும்

அம்மா என்று அவரை தமிழகமே அழைத்தாலும் எனக்கு ஜெயலலிதா என்று சொல்வதை தான் விரும்புகிறேன்.

ஜெயலலிதா கருணை மனம் குழந்தை உள்ளம் என்று ஏகத்திற்கும் சொந்தக்காரி. ஜெயலலிதா என்றால் கம்பீரம் அந்த சொல்லை சொல்லும் போதே ஒரு வீரம் வரும்.

பெயருக்கு ஏற்றாற்போல கம்பீரம் வீரம் எதிரிகளை துவம்சம் செய்தவள், மகத்தினில் பிறந்து ஜகத்தினை ஆண்டவள்.

வாழ்க்கை பாதையிலே பாசத்திற்கு ஏங்கி தவித்தவள் அந்த ஏக்கத்தில் தன்னை தொலைத்தவள்.

அவருக்கு அவரே போட்டு கொண்ட திரையினால் பல நல்லவற்றையும் இழந்தவள்.

#திரை_நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்து இருந்தால் நம்மோடு இணைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கும்.

தன்னால் முடியும் என்ற கர்வம் இருந்தாலும், தனக்கு நிறைய தெரிந்தாலும் அவரிடம் இருந்த தெளிவும் அதிகார தோரணையும் அவர் கண்களில் தெரியும் நேசமும் எந்த இதயத்தையும் வருடும்.

அவரின் தோலை நோக்கு பார்வை தொட்டில் குழந்தை திட்டம் அம்மா உணவகம் டாஸ்மாக் வரை அனைத்துமே பிடிக்கும்.

#TASMAC_SABASH

அதிலும் டாஸ்மாக் வருமானம் வரும் விஷயம் அதனை தனியார் வைன் ஷாப்களாக இல்லாமல் அரசுடைமையானது வியப்பானதும் விசித்திரமானதும் தான்.

ஆனால் அதையே அரசின் வியாபாரமாக மாற்றியதும் சதிகாரியின் செயலாகவே பார்க்கிறேன்.

அனைத்து கள்ள சாராய கடைகளால் போலியால் எத்தனை உயிர்கள் போனது என்று படித்த அனுபவம் உண்டு.

ஆனால் வருவாய் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் கடைகளை குறைக்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது இதுவும் அவரது மரணத்திற்கு ஒரு காரணமா?

மக்கள் முதல்வர் ஆனால் மக்களோடு உறவாடா முதல்வர் என்ற வருத்தம் உண்டு

உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் இருக்க வாய்ப்புகள் மிக குறைவு, அதுவும் தனியாக வாழும் ஒரு பெண்மணி தன் நலம் பேணாமல் இருப்பாரா என்பது சந்தேகமே?

எனக்கு தெரிந்த வரை வஞ்சகம் மட்டுமே அவரது உடலை அசைத்தது. நம்பாமல் இருத்தலும் நம்பி கெடுதலும் அதிகம் கேட்டதுண்டு இவர் யாரை நம்ப கூடாதோ அவளை நம்பியதால் நாம் அவரை இழந்தோம்.

திரை நட்சத்திரமாக இருந்தது அவருக்கு அரசியலில் உதவியாக இருந்தது ஒரு சில வெற்றிகளுக்கே.

ஆனால் அரசியலில் வெற்றி பெற அவரது சாதுரியம் காரணம். எதிலும் வெல்வேன் என்ற மன உறுதி மாறாத உறுதியாகவே பட்டது.

அது என்ன அரசியல் என்பது ஆணுக்கானது?
எவன் வைத்த சட்டம் ஆண்களால் வைக்கப்பட்டது தானே, உங்களை எல்லாம் ஆட்டி படைக்கிறேன் என்று ஒரு கைப் பார்த்தது எனக்கு மட்டுமில்லை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் .

அரசியலில் காழ்ப்புணர்ச்சி என்பது அவரிடம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது அதற்கான காரணமும் அவரை பெண் என்று சட்டமன்றத்தில் அசிங்க படுத்தியதை யாரும் மறக்க முடியாது.

மாசறு பொன்னே எங்கள் மரகத சிலையே திரையில் காவியமே அரசியலில் தனக்கென்று ஒரு பாணியை கொண்டு வந்தவரே அனைத்தும் இருந்தும் அநாதையாக இறந்தது இன்னும் எங்களால் மறக்க முடியாது

செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்தான் #கர்ணன். நீ ஏன் சதிகாரியுடன் இணைந்தாயோ உனது வாழ்க்கையில் வஞ்சகன் யாரோ

கூடி அழுத்திட கோடி பேர் இருந்தாலும் உனக்கு கோடி போட்டிட உன் ரத்த பந்தம் யாரும் பக்கத்தில் இல்லாதது கொடுமையே.

ஆயிரம் படிப்பினை தந்தாய் ஆனாலும் கடைசிவரை குடும்ப துணை வேண்டும் என்ற படிப்பினை அனைவரும் கற்றோம் தாயே உன்னாலே…

நெஞ்சு பொறுக்குதில்லையே உனது மரணத்தை நினைத்துவிட்டால் சதிகாரி சவப்பெட்டியில் உன்னை அடைத்தது எண்ணி எண்ணி இன்றும் அழுகிறோம்…..

J JAYALALITHA தொடர்வேன்

Leave a comment